2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இரத்ததானம் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளுள் ஒன்றான இரத்ததானம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் 2005ஆம் ஆண்டு க. பொ.த. உயர் தர பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு அதன் தலைவர் டி. டினேஷ் தலைமையில் நடைபெற்றது.

இரத்ததானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே. கருணாகரன் விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர், சுமார் 100 பழைய மாணவர்களிடமிருந்து இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X