2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நோலிமிட் தீ தொடர்பாக அமெரிக்க தூதுவருக்கு எடுத்துரைப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


நோ லிமிட்டை தீ வைத்து எரித்துள்ள  சம்பவம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று (21) அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது இன்று அதிகாலை நோ லிமிட்டை தீ வைத்து எரித்த  சம்பவம் மற்றும் யாழ்ப்பாணத்தில் பள்ளிவாயல் ஒன்றின் மீது இடம் பெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து விரிவாக தூதுவரிடம் எடுத்துக் கூறியதாக நகர சபை உறுப்பினா சல்மா ஹம்சா தெரிவித்தார்.

தனது கட்சித்; தலைவரான ரவூப் ஹக்கீம் பாணந்துறை நோலிமிட்டுக்கு சென்று பார்வையிட்டதாகவும்; தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் குறித்தும் இதன் போது அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக் கூறியதாக சல்மா ஹம்சா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X