2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சட்டவிரோத சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்,எம்.எம்.அனாம்                         
     

சட்டவிரோதமாக லொறியில்  கொண்டுவரப்பட்ட ஒருதொகை வெளிநாட்டுச் சிகரெட்டு பைக்கட்டுக்களை  நாவலடிப் பிரதேசத்தில் சனிக்கிழமை (21)  கைப்பற்றியதுடன், லொறியின் சாரதி மற்றும் உதவியாளரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிகரெட்டு பைக்கட்டுக்கள் கொழும்பிலிருந்து சாய்ந்தமருது பகுதிக்கு விற்பனைக்கு  எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவை கைப்பற்றப்பட்டதுடன், இவற்றின் பெறுமதி சுமார் 160,000 ரூபாவை  கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறினர்.

குறித்த லொறி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X