2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'திவிநெகும திணைக்களம் கூட மூடப்படலாம்'

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்காலத்தில் திவிநெகும திணைக்களம் கூட மூடப்படலாம். இதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திவிநெகும உத்தியோகத்தர்களிடம் உள்ளதென அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஏ.ஐகத்குமார தெரிவித்தார்

அகில இங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்,  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான  கூட்டம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள திவிநெகும திணைக்களத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எமது கைகளில் உள்ளது.
ஊழியர் சேமலாப நிதியிலிருந்த நாம் இன்று அரசாங்க நிரந்தர ஓய்வூதியத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளோம். இதனால், இந்த அரசாங்கத்திற்கு என்றும் நாம் நன்றிக் கடன்பட்டவர்கள்;. இந்த அரசாங்கத்தை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்.

தங்களால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் சேவைக்காலத்துடன் தொடர்ந்து திவிநெகும திணைக்களத்திற்குள் செல்வதே மிகச்சிறந்ததாகும். இதற்காகவே பல தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் நாங்கள் இதை வென்று எடுத்தோம். தங்கள் முடிவுகள் நல்ல முடிவாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து முடிவெடுக்க வேண்டாம்.

திவிநெகும உத்தியோகத்தர்களுக்காக மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளது என்ற நற்செய்தியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
நான்கு தீர்மானங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விடப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம், சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பொருளாளர் பாசுல் அன்வர், அதன் மட்டக்களப்பு தலைவர் எஸ்.ரவி, செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X