2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மட்டு. அரச அதிபர் தலைமையில் மாவட்ட மகளிர் மகா சம்மேளனம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் திங்கட்கிழமை (23)   மாவட்ட மகளிர் மகா சம்மேளனம் அமைக்கப்படவுள்ளதாக  உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிமுள்ள மகளிர் சம்மேளனத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 11 பெண்கள் பங்கேற்கவுள்ளனர்.

இவ்விதம் இம்மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்தும் 154 பேர் இந்த சம்மேளனத்தில் இடம்பெறுவார்கள் என இந்தத் திட்டத்தை அமுல்படுத்தும் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின்  கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.சொர்ணலிங்கம் தெரிவித்தார்.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் பணியாற்றும் ஒவ்வொரு மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரும் கொடையாளி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மகளிர் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுமாக சுமார் 250 பேரளவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X