2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

5000 முஸ்லிம் பொலிஸாரை நியமித்து முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும்: ஹரீஸ் எம்.பி

Menaka Mookandi   / 2014 ஜூன் 25 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.சீ.அன்சார், ஏ.எஸ்.எம்.முஜாஹித்
, எம்.வை.அமீர்

முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சநிலையைப் போக்குவதற்காக, முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து முஸ்லிம்கம் வாழும் பிரதேசங்களில் 5000 முஸ்லிம் பொலிஸாரை நியமித்து முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும் என்று எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி தெரிவித்தார்.

அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பிரதேசங்களிலும் அதனைத் தொடர்ந்து தெஹிவளை, பாணந்துறை போன்ற பிரதேசங்களிலும் பொது பல சேன என்ற இனவாத அமைப்பினால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமானதாக அமையவில்லை என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வெட்கமடைகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை ஹரீஸ் எம்.பி.யின் சாய்ந்தமருது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சம்பவ தினம் நானும்; எமது தலைவர் நீதியச்சர் றவூப் ஹக்கீமும் சம்பவ இடத்துக்கு சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கவில்லை.

அன்றைய சம்பவத்தை அடுத்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திவிட்டு பாதுகாப்புத் தரப்பினர்களால் முஸ்லீம்கள் அனைவரும் காடுகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னரே பாதுகாப்புத் தரப்பினர்களின் பூரண பாதுகாப்புடன் இந்த கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்த சம்பவமானது, பொது பல சேனா என்ற இனவாத அமைப்பும் அரசின் மேல்மட்டங்களுடைய பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வாகும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரியிருந்தோம்.

இந்த அமைப்பினால் ஏனைய பிரதேசங்களிலும் அட்டகாசத்தை புரிவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நாங்கள் அறிந்துள்ளோம். அந்த முன்னெடுப்பை மேற்கொள்வதற்கு முன்னர் எமது மக்களை விழிப்படையச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தினால், சர்வதேச நாடுகளினன் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளது.

அதுமாத்திரமன்றி நாடு முழுவதும் விண்ஷடமாக உலக நாடுகளினதும் மக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற ஹர்தால்கள். கடையடைப்புக்கள் போன்றவற்றினாலும் சர்வதேசத்தின் கவனம் பெறப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் நாம் இந்த அரசாங்கத்தின் அரச தரப்பு நாடாளுமன்ற பிரதிநிதிகளாக இருந்து கொண்டும் எமது மக்களுக்குரிய பாதுகாப்பையும் அவர்களுடைய இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளுக்கு அரசாங்க தரப்பிலிருந்து பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த தடைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் ஹரீஸ் எம்.பி குறிப்பிட்டார்.

எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 5000 பொலிஸாரை எமது மக்கள் வாழும் பிரதேசங்களில் நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான எமது மக்கள் நிம்மதியடைவார்கள். அத்துடன், முஸ்லிம் காங்கிரஸை மாத்திரம் பொதுமக்கள் குறை கூறுவதை நிறுத்த வேண்டும்' என்றும் அவர் மேலும் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X