2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மட். மகளிர் மகா சம்மேளனம் ஹம்பாந்தோட்டை விஜயம்

Super User   / 2014 ஜூன் 26 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை (23) ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மகா சம்மேளன அங்கத்தவர்கள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (26) ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின்(Sri Lanka Centre For Development Facilitation) கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ. சொர்ணலிங்கம் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் இன்று வியாழக்கிழமை (26) இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மகளிர் அபிவிருத்திச் சம்மேளனம், ஹம்பாந்தோட்டை மகளிர் சேமிப்புத் திட்டம், காளான் செய்கைத் திட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் என்பவனவற்றின் இணைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கள கற்கை விடயங்களை மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மகா சம்மேளன அங்கத்தவர்கள் இந்த ஹம்பாந்தோட்டை விஜயத்தின்போது அறிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ. சொர்ணலிங்கம் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மகா சம்மேளனம்  மட். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (23) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகம்.

இந்த சம்மேளனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மகளிர் சம்மேளனத்திலிருந்து 11 பெண்கள் என்ற அடிப்படையில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்தும் 154 பேர் பங்குபற்றியுள்ளதாகவும் DIAKONIAசர்வதேச உதவி நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையம் (Sri Lanka Centre For Development Facilitation) இந்த சம்மேளனத்தை ஏற்பாடு செய்துள்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X