2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2014 ஜூன் 26 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

 
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெலிக்காக்கண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த அபிவிருத்தித் திட்டங்கள் மக்களது பயன்பாட்டிற்காக புதன்கிழமை (25) கையளிக்கப்பட்டது.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான திட்ட அதிகாரி வில்லி வன்டன்பர்க், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், நீர்பாசன திணைக்கள மாவட்ட பணிப்பாளர் எஸ். மேகன்ராஜ், பொறியிலாளர் ஹேமகாந், பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், சோஆ (ZOA) நிறுவன பிரதிநதிகள், யுன்-ஹபிட்டாட் நிறுவன பிரதிநிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
சுமார் ஒன்பது மில்லியன் ரூபா நிதியில் சோஆ நிறுவனத்தினால் புனரமைக்கப்பட்ட நீர்ப்பாசன வாய்கால் திறக்கப்பட்டதுடன், யுன்-ஹபிட்டாட் நிறுவனத்தினால் நிருமாணிக்கப்பட்ட தலா 5 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுதமியான 33 நிரந்தர வீடுகளும் கையளிக்கப்பட்டன.

வெலிக்காக்கண்டி வாய்க்காலினூடாக நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் சுமார் 350 ஏக்கர் நிலம் பயனடைகிறது.

வெலிக்காக்கண்டி கிராமத்தில் விவசாயம், மீன்பிடி, சேனைப்பயிர்செய்கை போன்ற தொழில்களை தமது வாழ்தாரமகக் கொண்டு வாழும் 200 குடும்பங்கள் இத்திட்டங்களினுடாக பயனடையவுள்ளனர் என்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.




 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X