2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக கிராம சேவகர்களுக்கு விழிப்புணர்வு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக கிராம சேவகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வாண்டு புதிதாக நியமனம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கென  இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு பல்வேறு அரச உத்தியோகத்தர்களுக்கூடாகவும் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வூட்டல்களை மேற்கொண்டு வருகின்றது.

இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர்  எஸ்.கிரிதரன், கிராம மட்டத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் 'முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பற்றிக் கூடிய சிரத்தை எடுக்க வேண்டும். சௌகரியமான இருப்பிட வசதி குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமாகும். பிள்ளைகளின் செயல்பாடுகள், கல்வித் தராதரம், பெற்றோர்களின் பங்களிப்பு என்பவை முன் பிள்ளைப் பருவ ஆரம்பித்திலிருந்தே கவனிக்கப்பட் வேண்டும். 

மனிதவளம், வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் போன்றவற்றில் காணப்படும் அபிவிருத்திக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.  இதற்கு கிராம சேவகர்கள் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில்  மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீனிவாசன், மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X