2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய பொலிஸாருக்கு வெகுமதிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அர்பணிப்புடன் கடமையாற்றிய  பொலிஸாருக்கு வெகுமதிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (22) கோட்டைமுனை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, 70 பொலிஸாருக்கு 1.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெகுமதிகள் வழங்கப்பட்டன.

பொலிஸாரினால் நடாத்தப்பட்ட இந்த 4 ஆவது வெகுமதிகள் வழங்கும் நிகழ்வில் அதிக பட்சமான தொகையை வாகரை பொலிஸ் நிலையம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரெட்ண, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க, தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராட்சி, மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X