2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்தாங்கி தொகுதி வழங்கி வைப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கென உழவு இயந்திர நீர்தாங்கி தொகுதி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்கு இன்று (23) காலை வழங்கி வைக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ  அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த உழவு இயந்திர நீர்தாங்கி தொகுதியை மீள் குடியேற்ற அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், மீள் குடியேற்ற அமைச்சரின் இணைப்பு செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது இந்த நீர்த்தாங்கி தொகுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களான வவுணதீவு,  பட்டிப்பளை ஆகிய பிரதேச சபைகளுக்கு தலா ஒரு நீர்த்தாங்கி வீதம் வழங்கப்பட்டன.

4500 லீற்றர் தண்ணீரை கொள்ளக்கூடிய இதன் ஒவ்வொரு நீர்த்தாங்கியும் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியானது என  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X