2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சத்தியசாயி சேவா நிலையம் திறந்து வைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்
,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு தாமரைக்கேணி பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு சாயிகமலம் எனும் பெயரில் இன்று சனிக்கிழமை (23)  திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிலையத்தின் தலைவர் சி. சாமித்தம்பி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ சத்தியசாயி இலங்கை மத்திய சபையின் உபதலைவர் எஸ். பிரபாகரன் பிரதம அதிதியாகக்; கலந்துகொண்டு  இந்நிலையத்தை திறந்து வைத்தார்.

புஸ்பாஞ்சலி, தீபாஞ்சலி, பஜனை, வேத பாராயணம் ஓதுதல் மற்றும் சாயி சேவை பணிகள் பல் ஊடக திரையில் காண்பிக்கப்பட்டன.

இதன்போது மத்திய அறக்கட்டளை செயலாளர் மாலா சபாரெத்தினம் நிலைய வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

 இந்நிகழ்வில், கிழக்குப் பிராந்திய இணைப்புக் குழு தலைவர் ஞா. விநாயகமூர்த்தி மற்றும் சாயி அடியவர்கள்  கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X