2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'குடி நிறுத்துவோர்' கழகங்களை உருவாக்க தொண்டர்களுக்குப் பயிற்சி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு கிராமங்கள் தோறும் 'குடி நிறுத்துவோர் கழகங்களை உருவாக்குவதற்காக தொண்டர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதைய பயிற்சி நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற பயிற்சி நெறியில் பட்டிப்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 45 தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.

யுத்தத்திற்குப் பின்னர் மட்டக்களப்பில் மதுபாவனை அதிகரித்துள்ளதால் மதுப்பாவினையிலிருந்து மதுஅருந்துவோரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு உளநலச் சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட உளநல மருத்துவர் பி.ஜுடி ரமேஸ் ஜெயக்குமார் தெரிவித்தார்.

உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இந்தப் பயிற்சி நெறிகளில் கிராமங்கள் தோறும் 'குடி நிறுத்துவோர்' கழகங்களை உருவாக்குவதற்காக மட்டக்களப்பு- பட்டிப்பளைப் பிரதேசத்தில் 45 பேருக்கும், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தில் 70 பேருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு உளநலச் சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட உளநல மருத்துவர் பி.ஜுடி ரமேஸ்; ஜெயக்குமார் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.

குறைந்தபட்சம் ஒரு கிராமத்திற்கு ஒரு 'குடி நிறுத்துவோர்' கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு  சேவையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பயிற்சியின் போது குடிகாரர்களை இனங்காணும் வழிமுறைகள், குடிநோயை இனங்காண்பதற்கான வினாக்கொத்து, மதுப்பாவனையை அளவிடும் குறிப்புக்கள், பாவிக்கும் மதுவின் காரத் தன்மை போன்றவை பற்றியும் மதுப் பாவினையினால் உண்டாகும் ஆரோக்கிய, சமூக, பொருளாதாரப் பாதிப்புக்கள் பற்றியும் விழிப்புணர்வூட்டப்படுவதாக உளநல மருத்துவர் பி.ஜுடி ரமேஸ்; ஜெயக்குமார் தெரிவித்தார்.

'குடி நிறுத்துவோர்' கழகங்களுக்கு மேலதிகமாக பாடசாலைச் சமூகம், சிறுவர் கழகங்கள், மாதர் சங்கங்கள் என்பனவற்றிற்கூடாகவும் மதுப்பாவினைக்கெதிரான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X