2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீடு தீக்கிரை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகர் கிராமத்திலுள்ள தற்காலிக வீடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (24) முற்பகல் தீப் பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

குறித்த வீடு தீப்பற்றியதை அவதானித்த அயலவர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் இந்த வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

இவ்வீடு தீப்பற்றி எரியும் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் மின் ஒழுக்கு காரணமாக இந்த வீடு எரிந்திருக்கலாம் என அயலவர்கள் தெரிவித்தனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X