2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆக்கத்திறன் கண்காட்சி : ஹக்கிம் பார்வை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நடைபெற்றுவரும் சிறுவர்களின் உள வளத்துறையை மேம்படுத்தும் உளவள ஆக்கத்திறன் கண்காட்சியை சனிக்கிழமை (23) நீதியமைச்சரும் ஸ்ரீலங்;கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான றவூப் ஹக்கீம் பார்வையிட்டார்.

புதிய காத்தான்குடி  உமர் சன சமூக நிலையத்தினால் அல் உமர் சிறுவர் பாடசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாறூக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.தவம், ஆர்.எம்.அன்வர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் உட்பட பலர் பார்iவியிட்டனர்.

சிறுவர்களின் உளவளத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உளவள ஆக்கத்திறன் கண்காட்சி வெள்ளிக்கிழமை (22) புதிய காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் அல் உமர் சிறுவர் பாடசாலையின் ஏற்பாட்டில் இக்கண்காட்சி ஆரம்பமானது.

இதனை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பெரிறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், உமர் சன சமூக நிலையத்தின் தலைவர் ஏ.எல்.அம்ஜத், செயலாளர் ஏ.எல்.எம்.இர்சாத் ஆகியோர் அரம்பித்து வைத்தனர்.

இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (24) மாலை வரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சி சிறுவர்களின் உளவளத்துறையையும்  ஆக்கத்திறனையும் விருத்தி செய்யும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X