2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகர் பிரதான நெடுஞ்சாலையில்; இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதியைச் சேர்ந்த புஹாரி இஸ்திகான் (வயது 19) என்பவர் இன்று புதன்கிழமை (27)  அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வாழைச்சேனைப் பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வான் ஒன்று, திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதால் 04 பேர் காயமடைந்தனர்.

இதில் காயமடைந்த 04 பேரும்; உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஏறாவூர் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். இவர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஏறாவூரைச் செய்னுலாப்தீன் றியாஸ் (வயது 28), ஏ.டபிள்யூ.எம்.பிரோஸ் (வயது 20), மருதமுனையைச் சேர்ந்த வான் சாரதியான தௌபீக் (வயது 50) ஆகியோரே படுகாயமடைந்த ஏனைய மூவரும் ஆவர்;.

இவர்களை மோதி விட்டுத் தப்பிச்சென்ற வான் இன்றையதினம் (27) அதிகாலை கைப்பற்றப்பட்டதுடன், சாரதியும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X