2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெரும்போக நெல் விதைப்பு தொடர்பில் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்  வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறு நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை, உன்னிச்சைத்திட்டம், வலதுகரை வாய்க்கால், இடதுகரை வாய்க்கால் ஊடான பயிர்ச்செய்கை போன்ற  விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதன்போது உன்னிச்சைத் திட்டத்தின் கீழ் வலதுகரை வாய்க்கால் விஸ்தீரணம், ஆற்றுப்பாய்ச்சல், இடதுகரை வாய்க்கால் போன்றவற்றில் மொத்தமாக 15,185 ஏக்கரும் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் 28,730 ஏக்கரும் இவ்வருட பெரும்போகச் செய்கைக்கு பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வருட பெரும்போக விவசாய வேலைகள் 05.09.2014ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் விதைப்பு வேலைகள் 25.09.2014ஆம் திகதி தொடக்கம் 10.10.2014ஆம் திகதிவரை இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், விவசாய, கமநல சேவைகள் மற்றும் நீர்ப்;பாசனத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X