2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மக்களின் துயர் மேலிடத்துக்கு கொண்டு செல்லப்படும்: யோகேஸ்வரன் எம்.பி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


படுவான்கரை மக்களின் துயரத்தை மேலிடத்துக்கு கொண்டு செல்லப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், படுவான்கரை மக்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை(26) உறுதியளித்தார்.

காட்டு யானைகளின் தொல்லையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் 14ஆம் கொலனிப் பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், மக்களின் பாதிப்புக்கள் பற்றிக் கேட்டறிந்தார்.

காட்டு யானைகளால் அடிக்கடி ஏற்படும் தொல்லைகள், வீடில்லாப் பிரச்சினை, குடி நீர்ப் பஞ்சம், இங்கினியாகலை குளத்து நீர் தடைப்படுத்தப்படல், வீதி, போக்கு வரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளையும் பிரச்சினைகளையும் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.

முக்கியமாக யானைகளின் தொல்லையால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் தமது விவசாயம், தொழில் போன்றவை பாதிக்கப்படுவதாகவும் யானைகள் மக்கள் வாழும் பகுதியில் ஊடுருவுவதால் அச்சத்துடனேயே இரவுப்பொழுதைக் கழிக்க வேண்டியுள்ளதாகவும் மக்கள் தமது துயரத்தை வெளியிட்டனர்.

மேலும், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்தில் ஒரு நாள் மாத்திரமே இங்கு வருகை தந்திருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

தங்களுக்கு யானைகளைத் துரத்தும் சத்த வெடிகள் வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தெரிவித்தனர்.
நேற்றைய மக்கள் சந்திப்பின் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்க செயலாளர் கதிர்பாரதிதாசனும் உடனிருந்து மக்களின் கஷ்டங்களை தெளிவுபடுத்தினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X