2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாடசாலையின் கூரை மக்கள் பங்களிப்புடன் புனரமைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பன்குடாவெளி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாசடாலையின் கூரையை மக்கள் பங்களிப்புடன் திருத்தி புனரமைக்கும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை(26) நடைபெற்றது.

இப்பாடசாலையின் கூரை சேதமடைந்திருந்ததால் மழைகாலத்தில் பெரும் சிரமங்களை மாணவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்பதற்காக இந்த கிராம மக்கள் சேர்ந்து இந்தப்பாடசாலையின் கூரையை திருத்தி அமைத்ததுடன் கூரைக்கு ஓடு போடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு கிடைக்கப்பெற்ற குறைந்தளவிளான நிதியைக் கொண்டு இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், கிராம மக்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலைக்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்து தருமாறு இக்கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X