2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மின்சாரசபை ஊழியர்கள் மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஆலம் மரமொன்றில் இளைஞரொருவரை ஏற்றி மரக்கிளைகளை வெட்ட வைத்ததாகக் கூறப்படும் இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட  ஊழியர்கள் 03 பேரை  நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள காளிகோவில் வீதியில் மின்சார வயர்களுக்கு தடை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஆலம் மரக்கிளைகளை வெட்டுவதற்காக மேற்படி  ஊழியர்கள் 03 பேரும் குறித்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு சென்ற இவர்கள், ஆலம் மரத்தின் கீழே அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவரை ஆலம் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டுமாறு கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மேற்படி இளைஞர் ஆலம் மரத்தில் ஏறி கிளையொன்றை  வெட்டும்போது அது முறிந்து அருகிலிருந்த கொங்கிறீட் வீதியில் விழுந்தது. இதன்போது, மேற்படி  இளைஞரும் மரக்கிளையோடு சேர்த்து  தூக்கி வீசப்பட்டு கொங்கிறீட் வீதியில் தலை அடிபட விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த முறக்கொட்டான்சேனை, சேர்மன் வீதியைச் சேர்ந்த அஜித் (வயது 19) என்ற இளைஞர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இளைஞரின் உறவினர்கள் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.  இதனைத் தொடர்ந்து, மேற்படி ஊழியர்கள் 03 பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X