2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் இளைஞனின் சடலம் மீட்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தியாவட்டுவான் பகுதியில் சனிக்கிழமை (29) இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

சனிக்கிழமை (29) மாலை தோனியில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்தே மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டடுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் 25 - 30 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X