2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பனை அபிவிருத்திச் சபையின் கண்காட்சி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


பனை அபிவிருத்திச் சபையின் கண்காட்சி மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் மீள் குடியேற்ற பிரதியைமச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனால் இன்று சனிக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி; அபிவிருத்தியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட பனம்பொருட்கள் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலில்  இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள பனை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் இக்கண்காட்சியின் ஆரம்ப வபைவத்தில் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரட்னம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி கே.தங்கேஸ்வரி, மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் பி.குணரட்னம், செங்கலடி பிரதேச செயலாளர் எஸ்.உதயசிறி உட்பட பனை அபிவிருத்திச் சபை அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இக் கண்காட்சியில் பனம் பொருளினால் உற்பத்தி செய்யப்பட்ட பல உற்பத்திப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இக் கண்காட்சி நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறவுள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X