2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலவச சட்ட ஆலோசனை முகாம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


நேர்மையின் புகலிடம் (TRANSPARENCY  INTERNATIONAL  SRI LANKA) அமைப்பு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துடன் இணைந்து இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்றினை சனிக்கிழமை (30) களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தியது.

இதன்போது மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகளுக்கு வருகை தந்திருந்த மனித உரிமை ஆணைக்குழு மற்றும், சட்டத்தரணிகளால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக நேர்மையின் புகலிடம் அமைப்பின் திட்ட இணைப்பாளர் எஸ்.கௌசிகன் கூறினார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நேர்மையின் புகலிடம் அமைப்பின் திட்ட இணைப்பாளர் எஸ்.கௌசிகன், நேர்மையின் புகலிடம் அமைப்பின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான எவ்.எக்ஸ்.எஸ்.விஜயகுமார், சட்டத்தரணி பி.எம்.சுலோஜன், சட்டத்தரணி எல்.பிறேமகாந்தன், மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஆர்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X