2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு மைதானத்துக்கான வேலைகள் அங்குரார்ப்பணம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 03 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேசத்தின் மண்முனை கிராம சேவையாளர் பிரிவின் விளையாட்டு மைதான அமைப்பு வேலைகள் நேற்று (02) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் ஒரு பொது விளையாட்டு மைதானத்தின் தேவை மிக நீண்டகாலமாகவே இருந்து வந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான எஸ். சந்திரகாந்தனின் முயற்சியால் புதிய பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான துவக்கம் நடைபெற்றதாக,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய பி. பிரசாந்தன் தெரிவித்தார்.

இந்த மைதான நிர்மாண வேலைகளுக்காக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்துக்கு ஒரு செயற்றிட்டத்தின் கீழ் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானத்தின் ஆரம்ப நிர்மாணிப்பு வேலைகள் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X