2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி ஊர்வலம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி, பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு ஊர்வலம் நகரில் வியாழக்கிழமை (04) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின்; ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்த  ஊர்வலம் காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமாகி  மாநகரசபையைச் சென்றடைந்தது.

பிளாஸ்டிக் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடிப் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் கூடைகளுக்குப்  பதிலாக பிரம்பினாலான கூடைகளைப் பயன்படுத்துமாறு கோரிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் தாங்கிச்சென்றனர்.

இதன்போது,  மாநகரசபை ஊழியர்களும்  உத்தியோகஸ்தர்களும் மாநகரசபை அலுவலகத்திலும் வீடுகளிலும் பொலித்தீன் பாவனையை தடைசெய்வதற்கான சத்தியப்பிரமாணத்தை  மாநகரசபை  ஆணையாளர் எம்.உதயகுமார் முன்னிலையில் எடுத்தனர். 

குடிநீரை சேகரிப்பதற்காக மாநகரசபையால் கண்ணாடிப் போத்தல்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X