2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பஸ்-முச்சக்கர வண்டி விபத்து: மூவர் படுகாயம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்துக்குச் சமீபமாக இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற இ.போ.ச. கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸுடன் அதன் பின்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த பிரபாகரன் (வயது 35) மற்றும் சங்கீதா (வயது 32) ஆகியோரும் முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X