2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்  காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வருடம்  மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித்  திட்டங்களின் மீளாய்வு முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், திட்டங்களுக்கான அங்கிகாரங்களும் வழங்கப்பட்டன.

இந்தாண்டு  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 211 அபிவிருத்தித் திட்டங்களுக்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிராமத்துக்கு  ஒரு வேலைத்திட்டம், கிராமிய பாடசாலைகள் அபிவிருத்தித்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டிலான திட்டம், விசேட திட்டம், கிழக்கின் உதயம் அபிவிருத்தித்திட்டம், வாழ்வின் எழுச்சி திட்டம், மாகாணசபை நிதியொதுக்கீட்டிலான திட்டம், மத்திய அமைச்சின் நிதியொதுக்கீட்டிலான திட்டம் போன்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காhத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், காத்தான்குடி நகரசபையின் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், சல்மா ஹம்சா, எம்.ஏ.அலி சப்ரி காத்தான்குடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன் உட்பட அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி முகாமையாளர்கள், வாழ்வின் எழுச்சி உத்தியோகஸ்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X