2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் வேள்ட் விஷன் பிராந்திய அபிவிருத்தி திட்ட பிரிவின் ஏற்பாட்டில் கிரான் கோரகல்லிமடு கிராமத்திலுள்ள மாணவர்களுக்கு நேற்று (05) துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வேள்ட் விஷன் நிறுவனத்தினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேள்ட் விஷன் அமைப்பின் அலுவலகத்தில் திட்ட இணைப்பாளர் பி.ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மட்டு அம்பாறை மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.பி.நழீம், வேள்ட் விஷன் நிறுவனத்தின் கிரான் அபிவிருத்தி திட்ட முகாமையாளர் எஸ்.பி.பிறேமச்சந்திரன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது தலா ஒரு துவிச்சக்கர வண்டி 15,000 ரூபாய் பெறுமதியான 5 துவிச்சக்கர வண்டிகள் 5 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடலூர் கிராமத்திலிருந்து தொழில் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களது பிரயாணத்தை இலகு படுத்தும் பொருட்டே, இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக வேள்ட் விஷன் நிறுவனத்தின் கிரான் அபிவிருத்தி திட்ட முகாமையாளர் எஸ்.பி.பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X