2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொடர் சைக்கிளோட்டம் மட்டக்களப்பை சென்றடைந்தது

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


இருளில் இருந்து வெளிச்சத்துக்;கு வாருங்கள் எனும் தலைப்பில், ஓகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான சைக்கிளோட்டம் மட்டக்களப்பு நகர மத்திய பஸ் நிலையத்தை இன்று (06) சென்றடைந்தது.

திருகோணமலையிலிருந்து நேற்று புறப்பட்ட சைக்கிளோட்டம் இன்று  மட்டக்களப்பு பஸ் நிலையத்தை வந்தடைந்தது. சைக்கிளோட்ட வீரர்களை மட்டக்களப்பு ரொட்டறிக்கழகம் , மாநகர சபை மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் வரவேற்றனர்.

இலங்கையில் சராசரி நாளாந்தம் 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், 140 போ தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் மட்டக்களப்பு ரொட்டறிக்கழக தலைவர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

தற்கொலை முயற்சிகளை தடுக்கும் வண்ணம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நாடகம் பஸ் நிலையத்தில்; நடைபெற்றது.

இத் தொடர் சைக்கிளோட்டமானது கொழும்பிலிருந்து சிலாபம், அனுராதபுரம், கிளிநொச்சி , யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பை முடித்துக்கொண்டு நாளை (07) மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு அறுகம்பையை சென்றடையவுள்ளது.
அறுகம்பையிலிருந்து ஹம்பாந்தோட்டை, காலி, பெந்தோட்டை வழியாக கொழும்பைச் சென்றடையவுள்ளது.
இச் சைக்கிளோட்டமானது 1333 கிலோ மீற்றர் பயணத்தூரத்தை கொண்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X