2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறைக்கைதிகளுக்கு ஆன்மிக அறிவுரை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சிறைக்கைதிகள் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஆன்மிக அறிவுரை ஞாயிற்றுக்கிழமை (07) போதிக்கப்பட்டது. 

சிறைக்கைதிகள் வாரம் ஞாயிற்றுக்கிழமை (07) ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (14) நிறைவடைகின்றது. 

'சிறைக்கைதிகளும் மனிதர்களே அவர்களுக்கு உதவியளிப்போம்'  என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் எம்.ஐ.சித்தி சபீனா தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைக்கூட சபா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்து, இஸ்லாமிய சமயப் பெரியார்கள் சிறைக்கைதிகளுக்கு ஆன்மிக அறிவுரையை போதித்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை அதிகாரி ஆர்.மோகனராஜா தலைமையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் எம்.ஐ.சித்தி சபீனா, நலன்புரி உத்தியோகத்தர் எல்.ஜெயசுதாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் இணைந்து சிறைக்கைதிகள் வாரத்தை  ஏற்பாடு செய்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X