2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யானையின் தாக்குதலுக்கு இலக்கானவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறுத்தானை காட்டுப்பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வந்தாறுமூலை செட்டியார் வீதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி சண்முகநாதன் (வயது 50) என்பவர் நேற்று திங்கட்கிழமை (08) மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம்  அதிகாலை வழமை போன்று விறகுகள் எடுப்பதற்காக ஏனைய தொழிலாளர்களுடன் சென்ற இவரை, காட்டினுள்  நின்ற யானை தாக்கியுள்ளது.

இதன்போது,  ஏனையோர்; யானையின் தாக்குதலுக்கு அகப்படாதவாறு அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த இவரை, ஏனைய தொழிலாளர்கள்  மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக  பொலிஸார் கூறினர்.

இது  தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X