2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பரீட்சை முன்னோடி கருத்தரங்கு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள சுமார் ஆயிரம் மாணவ மாணவியர்க்கு திங்கட்கிழமை (8) மாபெரும் கல்விக் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது.

சட்டத்தரணி வி.சேனாதிபதி, தலைமையில் மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் 1000 மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், தமிழ் மற்றும் சரித்திர பாடங்களின் வினா விடைத் தொகுப்புக்கள் அடங்கிய 1500 ரூபாய் பெறுமதியான புத்தகங்களும் கையேடுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியமூர்த்தி,  அபிவிருத்தி பிரதிக கல்விப்; பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பி. உதயரூபன், உதவிப் பணிப்பாளர்களான சட்டத்தரணி கௌரி தேவசேனாதிபதி, வி. சுந்தரேஸ்வரன், இலங்கை ஆசிரியர் சங்க கல்குடாக் கிளைத் தலைவர் எஸ். வினோதன், 'றோஸ் சிற்றி' அமைப்பின் இணைப்பாளர் எஸ். ராஜேஸ்வரன் ஆகியோருட்பட இன்னும் பல கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X