2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரச காணியை கைப்பற்றியவர் வெளியேற்றப்பட்டார்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூரில் அரச காணி ஒன்றை அத்துமீறிக் கைப்பற்றியிருந்தவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை  (09) காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பிஸ்கால் அதிகாரி அரியரதி புவனேந்திரராஜா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவினுள் அடங்கும் ஏறாவூர் 6ஆம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 'ஆற்றங்கரை வெட்டை பன்புல்லுப்பூமி' என்று அழைக்கப்படும் 0.3641 ஹெக்டேயர் காணியை மேற்படி நபர் அத்துமீறிக் கைப்பற்றியிருந்தார்.

இந்த அரச காணியை ஒருவர் சட்டவிரோதமாகக் கைப்பற்றி அதை ஆட்சி புரிவதாக ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவினால் கடந்த 18.12.2013 அன்று வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் பிரகாரம் இந்தக் காணியை அத்துமீறிக் கைப்பற்றியிருந்தவர் வெளியேறுமாறு பணிக்கப்பட்டார்.

இந்தக் காணியை அத்துமீறிக் கைப்பற்றியிருந்தவரை வெளியேற்றுவதற்காக, நீதிமன்ற அதிகாரிகள் பொலிஸார் சகிதம் இன்றையதினம்  (09) காலை  காணிக்குச் சென்று   அத்துமீறிக் கைப்பற்றியிருந்தவரை  வெளியேற்றினர்.

இதன்போது, இந்தக் காணியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலும் வேலியும் உடனடியாக அகற்றப்பட்டன.

இதன் பின்னர், இந்தக் காணியிலிருந்து ஒரு பிடி மண் சம்பிரதாய முறைப்படி பிரதேச செயலாளர் சார்பாக ஏறாவூர் பிரதேச செயலக நிர்வாக அதிகாரி ஜி.கிருபாகரனிடம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பிஸ்கால் அதிகாரி; அரியரதி புவனேந்திரராஜாவினால் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பிஸ்கால் அரியரதி புவனேந்திரராஜா, நீதிமன்ற அலுவலர் ஏ.சி.ஏ.ஸலாம், நீதிமன்ற கட்டளைச் சேவகர்களான வி.செல்வகுமார், என்.கோணேஸ்வரன், பொலிஸ் அதிகாரிகளான ஆர்.எம்.பிரியதர்ஷன, எஸ்.சுமித்குமார், ஏறாவூர் பிரதேச செயலக நிர்வாக அதிகாரி ஜி.கிருபாகரன், கிராம சேவகர் எம்.ஐ.கபீர் முஹம்மத், ஏறாவூர் நகரசபை பிரதி நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லிம், ஏறாவூர் நகரசபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.எ.சி.எம்.ஷயீட், நகரசபை உறுப்பினர் எம்.எல்.அப்துல் லத்தீப் உள்ளிட்டோர்; கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X