2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபை முதல் இடத்துக்கு தெரிவு

Thipaan   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


அர்ப்பணிப்புடன் கூடிய மனிதாபிமானமிக்க மகத்தான சேவை செய்தமைக்காக  மட்டக்களப்பு மாநகர சபை முதல் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் உள்ள 48 உள்ளூராட்சி சபைகளில் தெரிவு செய்யப்பட்ட சபைகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குரிய விருதை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாநகர ஆணையாளர் எம். உதயகுமாரிடம் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவிக்ரம, மாகாணசபையின் உதவித் தவிசாளர் ஆரியவதி கலப்பதி, மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்வி, சுகாதாரம், மாகாண அமைச்சுக்கள் உள்ளிட்டவற்றில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X