2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. நகரில் ஊர்வலம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மனித உரிமைகள் ஆண்டு -2014 நிறைவு விழாவை முன்னிட்டு, மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு நகரில்  இன்று புதன்கிழமை ஊர்வலம் இடம்பெற்றது.

புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து ஆரம்பமாகிய ஊர்வலம்,  புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தை சென்றடைந்தது.

வரவேற்பு நடனம், மனித உரிமைகள் பற்றிய கட்டுரை, கவிதை. பேச்சு மற்றும் குறுந்திரைப்படம் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு கலாநிதி ஜோசப் பொன்னையா, பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, கரிதாஸ் திட்டமிடல் முகாமையாளர் கே.தெய்வேந்திரராஜா  உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X