2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி ஊர்வலம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு வெள்ளைப்பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை (15) நடைபெற்றது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும்  லயன்ஸ் பெண்கள் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த  இந்த ஊர்வலம்இ காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபம்வரை சென்றது.

தரிசன மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில் அதிதிகளாக மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் எஸ்.கிரிதரன்இ மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்இ லயன்ஸ் கழக தலைவர் எம்.மகேந்திரராஜாஇ லயன்ஸ் பெண்கள் கழக தலைவர் ஜெயபிரபா சுரேஷ், தரிசன தலைவர் முருகு தயானந்த உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X