2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கூரையிலிருந்து விழுந்த கைதி பலி

Thipaan   / 2014 ஒக்டோபர் 15 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நீதிமன்றத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த கைதி ஒருவர் கூரையிலிருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் இன்று (15) உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சிறு குற்றவாளியான இவர் மட்டக்களப்பு சிறைச்சாலை கைதியாவார்.

படுகாயமடைந்த கைதி உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த பரமானந்தமூர்த்தி சண்முகநாதன்(45வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள சிறு குற்றவாளிகளான கைதிகள் சமுதாயஞ்சார் சீர் திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.
அவ்வாறே நீதிமன்றத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றின் கூரையைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கூரையிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X