2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 24 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் கழிவுகளை சேகரித்தல் தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையால் மக்களுக்கு தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுரங்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) அரசடியில் விநியோகிக்கப்பட்டன.

செயல்முறைகளை இலகுவாக்கும் நோக்கோடு உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள், மீள்சுழற்சிக்குரிய கழிவுகள் என வகைப்படுத்தி வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் மாநகரசபையின் திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் மாதாந்தம் 3,500 கிலோ சேதனப்பசளை உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது சுகாதார வாழ்வுக்கு  சேதனப் பசளைகளின் முக்கியத்துவம் பற்றியும் வீடுகளில் இயற்கை உரம் தயாரிப்பதற்கான செய்முறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் தொழிலாளர்களினால் இதன்போது வழங்கப்பட்டன.

ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனத்தின் ஊடாக அமுல்படுத்தப்பட்டுவரும் இந்த நடவடிக்கையின்போது கழிவுகளை குறித்த  பிரதேசங்களில் சேகரிப்பதற்கான தினங்கள் அடங்கிய அட்டைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X