2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்து இளைஞர் பேரவையால் நிவாரணங்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கொஸ்லாந்த மீரியாபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக சுவிஸ்ரலாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் உடுதுணிகள் வெள்ளிக்கிழமை (31) வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில், கொஸ்லாந்த ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலய முகாம் மற்றும் பூனாகல தமிழ் மகா வித்தியாலய முகாம் ஆகியவற்றில் தங்கியிருக்கும் 54 குடும்பங்களுக்கு சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாருக்குமான அனைத்து வகையான ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

சுவிஸ்ஸர்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் இரண்டு இலட்சத்து நாற்பத்தையாயிரம் ரூபாய் உடனடி உதவிக்காக வழங்கப்பட்டிருந்தது.


இதன்போது இம்மக்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான உடைகளும் வழங்கி வைக்கப்பட்டது
.
வெளி இடங்களிலிருந்து முதல் தடவையாக தங்களுக்கு உதவி கிடைத்ததாகவும் இது தங்களுக்கு அத்தியாவசியமாக தற்போது தேவைப்படும் உதவியெனவும் மக்கள் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X