2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய நூலகம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 02 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமொன்றை காத்தான்குடியில் அடுத்த வருடம் திறக்கவுள்ளதாக  காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபையால் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, காத்தான்குடி நகரசபையின் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (01)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு அவசியமாகுமென்பதுடன்,  வாசிப்பு மனிதனை முன்னேற்றும். வாசிப்பின் மூலம் பல்வேறுப்பட்ட அறிவை நாம் பெற்றுக்கொள்கின்றோம்.

காத்தான்குடியில் ஒரு சிறிய நூலகமே உள்ளது. இந்நிலையில், நாங்கள் நூலகமொன்றை நிர்மாணித்து வருகின்றோம். இந்நூலகத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த வருடம் முடிவடைந்துவிடும். இது கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமாக திகழும். 

மேலும், அடுத்த வருடம் காத்தான்குடி நகரசபைப் பிரிவின் பல்வேறு பகுதிகளிலும் புதிய 06 சிறிய நூலகங்களை காத்தான்குடி நகரசபையால் திறந்துவைக்கவுள்ளோம். இதற்கான முன்;மொழிவு 2015ஆம் ஆண்டுக்கான  காத்தான்குடி நகரசபை வரவு -செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, தற்போது காத்தான்குடி நகரசபை பிரிவில் முன்னெடுக்கப்படுகின்ற நடமாடும் நூலக வாகனத்தின் மூலம் வீட்டிலுள்ள  வீட்டுத்தலைவிகளும் பெண் பிள்ளைகளும் அதிகளவில் நன்மையடைகின்றனர். நூலகத்துக்குச் சென்று புத்தங்களை பெற்றுக்கொள்ள முடியாத வீட்டுத்தலைவிகள்  மற்றும் பெண்கள், இந்நடமாடும் நூலக வாகனத்தில் நூல்களை பெற்று வாசிப்பதுடன், தங்களுக்கு தேவையான புத்தங்களையும் கேட்டுப் பெறுகின்றனர். இந்நடமாடும் நூலக வாகனத்தில் இதுவரைக்கும் 3,500 அங்கத்தவர்கள் சேர்ந்துள்ளனர். இது வாசிப்பின் அதிகரிப்பை காட்டுகின்றது' என்றார்.

இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், காத்தான்குடி நகரசபை செயலாளர், உத்தியோகஸ்தர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபையால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், 'தற்கால இளைஞர்கள் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்'  மற்றும் 'தற்கால இளைஞர்கள் வாசிப்பில் ஆர்வம் காட்டவில்லை' எனும் தலைப்புக்களில் பெரியவர்களுக்கான திறந்த விவாதப்போட்டியும் இங்கு நடைபெற்றது.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X