2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிறிஸ்தவ மக்களின் கல்லறை திருநாள்

Gavitha   / 2014 நவம்பர் 03 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிறிஸ்தவ மக்களின் கல்லறை திருநாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இறந்த ஆத்மாக்களை நினைவு கூறும் வைபவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சேமக்காலைகளில் நடைபெற்றது.

இதன் வைபவமொன்று மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ சேமக்காலையில், நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தின் பங்குத் தந்தை எக்ஸ்.ஐ.றஜீவன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பங்குத் தந்தை எக்ஸ்.ஐ.றஜீவன் பிராத்தனையை நடாத்தி திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.

இதில் இறந்த ஆத்மாக்களுக்காக அவர்களின் உறவினர்கள் கல்லறைகளுக்கு மேல் மெழுகு திரிகளை ஏற்றி பிராத்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் போது பதுளை கொஸ்லாந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் உயிரிழந்தவர்களுக்கான பிராத்தனையும் நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X