2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாலர் பாடசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Gavitha   / 2014 நவம்பர் 03 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் நிரந்தர கட்டடத்துக்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (03) காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் தலைவருமான எச்.எம்.எம்.பாக்கீர் தலைமையில் நடைபெற்ற.
 
இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
 
இக்கட்டடத்தின் முதற் கட்ட நிர்மானப்பணிக்காக, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இருபது இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில், பிரதேச முக்கியஸ்தர்கள், பாலர் பாடசாலை நிருவாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X