2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கல்வி அலுவலகங்களுக்கு பிரதியமைச்சர் பிரபா கணேசன் விஜயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 05 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை வருகை தந்துள்ள தொலைத்தொடர்புகள் தொழில்நுட்பப் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள கல்வித் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

யுத்தம் காரணமாக நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டு இன்னமும் சரியான முறையில் தேவைகள் நிறைவேறாத நிலையில் உள்ள வலயக் கல்விப் பிரிவுகளில் உள்ள தேவைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்வதாக தொலைத்தொடர்புகள் தொழில்நுட்பப் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் உறுதியளித்தார்.

கல்வி வலயங்களுக:கு நேரடியாக சென்ற பிரதி அமைச்சர், கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், யுத்தம் காரணமாகத் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களின் பாடசாலை அபிவிருத்திகளில் 2015ஆம் ஆண்டு முக்கிய கவனங்களைச் செலுத்துவதாகவும் தெரிவித்தர்.

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கணினி ஆய்வுகூடங்களைத் திறந்து வைக்கும் நோக்கில் நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த தொலைத்தொடர்புகள் தொழில்நுட்பப் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், நேற்றையதினம் 8 கணினி தொழில்நுட்பக்கூடங்களைத் திறந்துவைத்தார். அதேபோல் இன்றையதினமும் 8 கணினி தொழில்நுட்ப ஆய்வுகூடங்களைத் திறந்து வைக்கிறார். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் உள்ள சின்னவத்தை கிராமத்திலுள்ள விகாரையில் நனசல கணினிக் கூடத்தினையும்  திறந்து வைக்கிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X