2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ரணில் ஆட்சியில் இருந்தால் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் வீட்டில் இருக்கவேண்டும்: ஜகத் குமார

Gavitha   / 2014 நவம்பர் 09 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்திருந்தால், சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்திருக்கும் என்று மேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்தர் சங்கத்தின் செயலாளருமான ஜகத் குமார தெரிவித்தார்.

அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்தர் சங்கத்தின் ஏற்பாட்டில், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான வருடாந்த மாநாடு சனிக்கிழமை (08) மட்டக்களப்பு மஹஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஓய்வூதியத்திட்டத்துக்குள்  உள்வாங்கப்படாமல் கடமை புரிந்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், இன்று ஓய்வூதியத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இதனை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன் உடையவர்களாக நாம் இருக்க வேண்டும். சமூர்த்தி உத்தியோகஸ்தர்களின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
ரணில் விக்கரமசிங்க இந்த நாட்டின் ஆட்சிக்கு வந்திருந்தால் சமூர்த்தி உத்தியோகஸ்தர்களை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்.

இன்று இந்த நாட்டில் வறுமை ஒழிப்புக்கு என திணைக்களமே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த நாட்டில் வறிய மக்களின் வறுமையை ஒழித்து சுபீட்சமுள்ளவர்களாக மாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முயற்சிகள் அனைத்துக்கும் நாம் ஒத்துழைப்பாகவும் உதவியாகவும் இருக்க வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நாம் அவரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X