2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காது கேட்கும் கருவி வழங்கி வைப்பு

Gavitha   / 2014 நவம்பர் 09 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

 அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவினால் விசேட  தேவையுடைய ஒருவருக்கான காது கேட்கும் கருவி சனிக்கிழமை(08) வழங்கி வைக்கப்பட்டது.

 சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அன்வரின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செலயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு காது கேட்கும் கருவியை வழங்கி வைத்தனர்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கமைய  விசேட தேவையுடையவர்களுக்கான பல்வேறுபட்ட உதவிகளையும் ஆலோசனைகளையும் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களம் மற்றும் சமூக சேவை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

இவ்வாறான உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நம்பிக்கையையும் தைரியத்தையும் பலப்பபடுத்துவதோடு நாட்டிற்கு அவர்களினது பங்களிப்பினையும் அரசாங்கம் எதிர்பார்த்து நிற்கின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X