2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலையில் மாணவர் விடுதிகள் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 10 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதிக்கான இரண்டு கட்டடங்களை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) திறந்துவைத்தார்.  அத்துடன், புதிதாக அமைக்கப்பட்ட விடுதி வளாகத்தினுள்  மரக்கன்றுகளையும் அவர் நாட்டிவைத்தார்.

மேற்படி பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக  பிரதான வளாகத்தில்  இந்த நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு  தொடர்ந்து உதவிகளை வழங்கிவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும் நன்றி தெரிவித்த பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, தொடர்ந்தும் இதுபோன்ற உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இங்கு அமைச்சர் உரையாற்றுகையில்

கிழக்கு பல்கலைக்கழகம் கடந்த மூன்று வருடங்களுக்குள் பாரிய மாற்றத்தை அபிவிருத்தித்துறையிலும் சரி, பல்கலைக்கழகம் சார்ந்த ஏனைய துறையிலும் சரி  கண்டுள்ளன. கிழக்கு பல்கலைக்கழகம் உலக தரத்தில் அதன் வளர்ச்சிப்படியில்  முன்னேறியுள்ளது. இவ்வாறான அபிவிருத்தியைக் கொண்டுவந்தமைக்காக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவுக்கு  நான் பாராட்டுத் தெரிவிக்கிறேன்.  அத்துடன்,  கிழக்கு பல்கலைக்கழகத்தின்; வளர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள்; மற்றும் ஊழியர்களுக்கும் எனது பாராட்டுக்களை  தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், இரண்டு வருடங்களுக்குள்  பொறியியல்த்துறையை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கொண்டுவருவேன்' எனக் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X