2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பஸ் மோதி பாடசாலை மாணவன் பலி

Gavitha   / 2014 நவம்பர் 10 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம். நூர்தீன்,கே.எல்.ரி.யுதாஜித் ,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன்வெளி திருமலை வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பல் 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்;, கூழாவடியைச் சேர்ந்த 13 வயதான அ.கேசாந் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான்.

துவிச்சக்கர வண்டியில் பகல் நேர வகுப்புக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை வேகமாக வந்த பஸ் வண்டி, அவர் மீது மோதியதிலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் கால் வேறு உடல் வேறான நிலையில் சடலம் வீதியில் வீசப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X