2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாவனைக்குதவாத உணவுகளை விற்ற எண்மர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 11 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும்  8 பேரை மட்டக்களப்பு  நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (11) கைதுசெய்துள்ளதாக மாநகர சுகாதாரப் பரிசோதகர் என்.தேவநேசன் தெரிவித்தார்.

பொலிஸாரின் உதவியுடன் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, 3 ஹோட்டல் உரிமையாளர்களும் 4 வடை வியாபாரிகளும் மளிகைப்பொருள் வியாபாரி ஒருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இரண்டாவது சுகாதார அபிவிருத்தித்துறை திட்டம் - 2014 இற்கு அமைய, நகரிலுள்ள 10 ஹோட்டல்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது,  சந்தேகத்துக்கிடமாக கருதப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் இனிப்புப்பொருட்களின் மாதிரிகளை சோதனைக்காக கொழும்புக்கு  அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பத்திரிகைகளில் உணவுகளை பொதி செய்யவேண்டாமெனக் கூறியபோதிலும், பொதி செய்ய வைத்திருந்த பத்திரிகைகளை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X