2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வது பற்றி கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 11 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மாரி காலத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டு பிரதேச மக்களை காப்பாற்றும் செயற்றிட்டம் பற்றிய கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை  வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பாலித்த பெர்ணாண்டோ, பிரதேச இராணுவ கட்டளைத்தளபதிகள் கலந்துகொண்டு வெள்ளப்பெருக்கு அனர்த்தம் எற்படக்கூடிய இடங்களைக் கேட்டறிந்தனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X