2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

களுவாஞ்சிக்குடியில் புதிய பொதுநூலகம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 12 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராம பொதுநூலகத்துக்கான புதிய கட்டடம்  கடற்கரை வீதியில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

'கிழக்கின் உதயம்' வேலைத்திட்டத்தின் கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 5 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக   மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபைச் செயலாளர் யாகேஸ்வரி வசந்தகுமாரன்  தெரிவித்தார். 

இப்புதிய  நூலகத்தை விரைவில் திறந்துவைக்கவுள்ளதாகவும் இருப்பினும்,  திறப்பு விழாவுக்குரிய திகதி இதுவரையில்  தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.  

தற்போது களுவாஞ்சிக்குடி கிராமத்துக்கான பொதுநூலகம் களுவாஞ்சிக்குடி பிரதான வீதியிலுள்ள தனியார் கட்டடத்தில் இயங்கிவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X